வாழ்க்கை அழகாக இருக்கட்டும்/வசந்ததீபன்

அலெக்ஸாண்டர் போல
ஆக்ரமிப்பிற்கு
எதற்காக
அலைகிறீர்கள்…?
குடும்பம் தொலைத்து..
குழந்தைகள் மறந்து..
சுற்றம் தவிர்த்து..
மனைவி பிரிந்து..
தாய், தகப்பன், உடன் பிறப்புகளை
உதறி விட்டு…
யாருக்காக
ஆயுதங்கள் தரித்துப் போகிறீர்கள்…?
நீங்கள் செத்து..
அல்லது
மற்றவர் செத்து..
என்ன
விளையப்போகிறது…?
கண்ணீரும், ரத்தமும்
ஓடும்… உறையும்…
புகை வனத்தில்…
வலிகள் வீசும் வெளிகளில்…
பைத்தியங்கள்..
ரோகிகள்..
பிணங்கள்…..

🦀

One Comment on “வாழ்க்கை அழகாக இருக்கட்டும்/வசந்ததீபன்”

Comments are closed.