எந்தப் பறவை எப்போது வாலாட்டும்/எம் டி முத்துக்குமாரசாமி

ஹலோ
கார்லோஸ் காஸ்டனாடா
உற்சாகமாக இருப்பதற்கும்
மனமுடைந்து இருப்பதற்கும்
ஒரே அளவு பிரயத்தனம்தான் தேவை
என்றீரல்லாவா?
ரஷ்ய- உக்ரெய்ன் போர்
ஆரம்பித்த உடனேயே
கொரொனோ போன இடம் தெரியவில்லை
மருந்து வியாபாரத்தின் போது
வீடடைந்து லயம் தொலைந்தது
இப்போது
ஆயுத வியாபாரத்தின் போது
வெளி அடைந்து மனம் பிசகியது
பிரயத்தனம் ஏதுமில்லை
குளிர் நீர் பூவாளி அடியில்
தினமும் எவ்வளவு நேரம் நிற்கவேண்டும்?
எந்தப் பறவை எப்போது வாலாட்டும்?