
ரஷ்யா ஏன் உக்ரைனுடன்
சண்டை இடுகிறது
நமக்கு அதனால்
பெற்றோல் விலை அதிகமாகி விட்டது
வெங்கடேஸ்வர போளி ஸ்டாலில்
உருளைக்கிழங்கு சிப்ஸ் ₹ 40 ஆகிவிட்டது
படிக்கச் சென்ற இந்திய
மாணவ மாணவிகள்
நிலை என்ன?
பத்திரமாகத் திரும்பி வருவார்களா?
உலக அரங்கில்
இது ஒரு அபத்த நாடகம்
இந்தப் போரால்
ஆயிரக்கணக்கான உயிர்களை இழக்கிறோம்
யாரிடம் யார் சொல்வது
