உயரும் வளைக் கரங்கள்/மு.மு.அஷ்ரப் அலி

வளைக்கரம் ஒன்று உயர்ந்திட
வாழ்வில் எதிர்கொள்ளும்
பிழம்புகள்தாம்
எத்தனை எத்தனை !
கற்பின் மீது தாக்கப்படும்
பிழம்பொன்று.
வரதட்சணையாகக் கொட்டப்படும்
பிழம்பு இன்றொன்று.
பலவீனமானவள் என்றே
பசப்பும் பிழம்பு வேறொன்று.
குடும்பச் சுமையென்ற
பெரும் பிழம்பும் கடும் சூடாய்.
மதுக்கொடுமை என்ற பிழம்போ
மரணத்திற்கே இட்டுச் செல்லும்.
எகத்தாளமாய் இளக்காரமாய்
ஏவப்படும் பிழம்புகள்
இன்னும் ஆயிரமாய்.
எல்லாவற்றையும் தாங்கி
உலகைக் காத்திட
உயரும் வளைக் கரங்கள்
உரம் பெறட்டும்.
புனிதக் கரங்களைப்
போற்றியே செப்புவோம்
மகளிர் தின வாழ்த்துகள் !