திருடன்/♦அனங்கன்

அட்டைப்படம் இதுபோல் ஆபாசமாய்…
அமைவது முழுக்கதையும் இப்படித்தான் என்று
சொல்வதற்கா…?

அப்படியில்லை கதையை
படிக்கவைக்க…இப்படிதூண்டுவது
ஒரு வியாபாரத் தந்திரம்தான்…

அப்படியானால் நீங்கள் படைப்பாளியா…வியாபாரியா

நானும் வாழத்தானே வேண்டும்…

அதற்கான வழி…மிகவும்
மலிவாகத்தெரிகிறதே…
இலக்கியம் படைப்பதற்கு இதுதான் வழியென்றால்
பெண்உரிமைப் போராளிகள்
இதற்காக கொடிபிடிக்ககூடுமே…

அப்படியெல்லாம் நடந்துவிடாது…அட்டைப்படம்
அப்படியே அமையட்டும்…
இலக்கியவாதியும் வளரத்தானே வேண்டும்…

அதற்குமுன்… நேர்மையாய்…உங்கள் குடும்பத்திடம்
இந்தப்புத்தகத்தைக் காட்டி
கொஞ்சம் கருத்தறிந்து
வாருங்களேன்.

One Comment on “திருடன்/♦அனங்கன்”

  1. சரியான விமர்சனம். நான் நினைத்ததை திரு. அனங்கன் எழுதி விட்டார்- almost. ஆனால் இந்த அட்டைப் படத்திற்கு திரு. அழகிய சிங்கர் எப்படி
    பொறுப்பாவார்? இது அவர்
    பதிப்பித்த புத்தகமல்லவே.

    இதில் படிப்பினை: பிற
    பதிப்பாளர்களிடமிருந்தும்
    இது போன்ற அட்டைப்படம்
    போட்ட புத்தகங்களை வாங்கி தன் ஸ்டாலில்
    வைக்கக்கூடாது. நஷ்டம்
    ஏற்படாது.

Comments are closed.