ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 42/அழகியசிங்கர்

09.03.2022 – புதன் 

 
ஆசிரியர் பக்கம்


மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்

மோகினி: புத்தகக் காட்சியை வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள் போலிருக்கிறது?

அழகியசிங்கர் : ஆமாம். ஜெகன் :  எப்படி இருந்தது?

மோகினி :  எனக்குத் தெரிந்தவரைச் சிறப்பாக இருந்தது என்றுதான் கூற வெண்டும். 

அழகியசிங்கர் :ஆரம்பத்தில் டல்.  சனி ஞாயிறுகளில் கூட்டம். 

மோகினி :  அதிகமாக விற்ற புத்தகங்கள்..

அழகியசிங்கர் : என் புத்தகங்கள்தான்.  ‘அப்பாவின் அறை’, ‘அஞ்சலட்டைக் கதைகள்’, ‘அசோகமித்திரனும் நானும்’ என்ற மூன்று புத்தகங்களும் சிறப்பாகப் போயிற்று.

ஜெகன் :  காலை 11 மணியிலிருந்து இரவு 8 மணி வரை இருந்தீர்கள்.

அழகியசிங்கர்:  இரண்டு நண்பர்களின் தன்னலமற்ற உதவியால் என்னால் சமாளிக்க முடிந்தது.

ஜெகன் : புத்தகங்கள் வாங்கினீர்களா?

அழகியசிங்கர் :வாங்கக் கூடாது என்று நினைத்தேன்.  ஆனால் வாங்கும்படி ஆயிற்று.

மோகினி :  முக்கியமான நிகழ்ச்சியாக நீங்கள் கருதுவது.

அழகியசிங்கர்  :  எஸ்.ராமகிருஷ்ணன், மகுடேசுவரனைப் பார்த்தது.

மோகினி :  பெரும்பாலான ஸ்டால்கள் காலியாக இருந்தன.

அழகியசிங்கர் : ஆமாம். என் ஸ்டால் பக்கத்திலிருந்தது நீலம் ஸ்டால். அந்த ஸ்டாலில் கூட்டம் தாங்க முடியவில்லை.  எதிரில் உள்ள ஸ்டாலில் கூட்டமே இல்லை.

ஜெகன் :  புத்தகங்களைப்பற்றி முகநூலில் எழுதினீர்கள் போலிருக்கிறது.

அழகியசிங்கர் : ஆமாம். புத்தகங்கள் பற்றி எழுதியதால் புத்தகங்கள் விற்க முடிந்தது. 

மோகினி :   இந்தப் புத்தகக் காட்சியில் கடினமாக நீங்கள் நினைத்தது என்ன?

அழகியசிங்கர் :  வயிறுதான்.  அதை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்தேன்.  இன்னொன்றும் சொல்ல வேண்டும்.  புத்தகக் காட்சி போகிற வழி.  ஒரே டிராபிக்.  ஜாக்கிரதையாகப் பார்த்துப் போகாவிட்டால் ஆபத்தில் போய் முடியும்.

மோகினி :  புதுமைப்பித்தன் புத்தகத்தை ரூ.150க்கு விற்றார்களே?

அழகியசிங்கர் : ஆமாம்.  போட்டிப்போட்டுக்கொண்டு விற்றார்கள்.  இன்னொரு பதிப்பகமும் சேர்ந்துகொண்டு ரூ.100க்கு புதுமைப்பித்தனை விற்றார்கள்.  அது மட்டுமல்ல ஜெ.பிரான்சில் கிருபாவின் ‘கன்னி’ என்ற நாலல் 100 ரூபாய்க்குக் கிடைத்தது. 

ஜெகன் : புத்தகங்கள் வாங்கி விட்டீர்கள்..அடுத்தது என்ன?

அழகியசிங்கர்.  படிக்க முயற்சி செய்ய வேண்டும்.  படிப்போம்.                                                                                                                                                          எழுதியது இரவு 10.38 


One Comment on “ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 42/அழகியசிங்கர்”

Comments are closed.