
என்பா 72
என்பா என்பா சொல்லிக்கொண்டு திரிந்தேன்
வெண்பா எழுதுபவர்கள்
திகைத்து நின்றார்கள்
வெண்பாவின் சகோதரிதான் என்பா என்றேன்.
என்பாவும் வெண்பாவும் சிரித்தன
என்பா 73
மேலும் நான் உங்களுடன் பேசவில்லை
நீங்கள் எதையோ
என்னிடம் மறைக்கிறீர்கள்
காதல் என்பது பொய்யா
சொல்லுங்கள்
உங்களுடன் பேச
விரும்பவில்லை
