
இந்த
நிகழ்வின்
முதல்
அத்தியாயத்தை
எழுதியது
ஆர்?
முகத்தில்
பதிந்த
சுவடுகளைக்
கண்களால்
காண்பித்துப்
போகிறவன்
இற்று
வீழ்கிற
விருட்சங்கள்
எழுப்பும்
சப்தம்
இதற்கும்
கேட்கலாம்
என்றான்
நகைத்து.
எனக்குக்
கேட்டது
உனக்கும்
கேட்டிருந்-
திருக்கலாம்
வாய்விட்டு
அழுகிறதுதான்
என்றாலும்
சப்தம்
சிறிதும்
நழுவி
விடாதபடிக்கு
அழுந்தப்
பொத்துகிற
நாகரீகத்தின்
மெல்லிய
விரல்களை
மீறும்
விம்மல்களுக்கு
இடையிலும்
நீற்றலையில்
கன்னங்களை
குளிராய்
வருடும்
காற்று.
உதிர
மாலையை
உதிராது
அலையும்
தென்னங்
கீற்றுகளில்
தீற்றிவிட்டுத்
தப்பி
யோடுகிறவனின்
லாவகம்
தெரிந்தால்
நல்லது
பிறகும்
மற்றவர்
பின்
தொடராதபடிக்கு
ஒரு
வாசஸ்தலம்
க(கா)ட்டப் படலாம்.
அதற்கு
முன்
நான் யார்
என்பதைத்
தெரிந்து
கொள்ளத்
தூண்டுகிற
கிழவனைத்
தெரிந்து
கொள்ளாத
படிக்கு
என்னையெப்பவும்
நிழலுக்குள்
செலுத்திக்
கொண்டு
இருக்கிற
நீ யார்
என்பதைத்
தெரிந்து
கொண்டாக
வேண்டும்
எனக்கு
எப்படியாவது.

‘எப்படியாவது’….
என்ற முடிவு…முற்றுப்புள்ளி இல்லாதது. மிகப்பெரிய முயற்சி ‘8 ‘ வடிவ நடை ப் பயிற்சி போல. Infinity walking.
‘வாய்விட்டு
அழுகிறதுதான்
என்றாலும்
சப்தம்
சிறிதும்
நழுவி
விடாதபடிக்கு
அழுந்தப்
பொத்துகிற
நாகரீகத்தின்
மெல்லிய
விரல்களை
மீறும்
விம்மல்களுக்கு
இடையிலும்
நீற்றலையில்
கன்னங்களை
குளிராய்
வருடும்
காற்று.’ என
சோகத்தின் இடையிலும் ரசனை நுகரும் மனம்.
ஆதிமனிதனோடு பிறந்த தேடல்…எப்போதும் முடியாமல்…தொடராக.