
என் மொழி
என்ன ஆனது?
எங்கு தொலைந்து
போனது…
எங்கு தேடியும்
கிடைக்கவில்லை
தேடித் தேடி/கேள்விக்காரன்
அறிவுத் துடைப்பம்
கொண்டு
இண்டு இடுக்கு
எல்லாம்
நுணுக்கமாய்ப்
பெருக்கிப் பார்த்து
விட்டேன்
என் மொழியோடு
அன்பும் காணவில்லை.
அந்த அலமாரியில்
கை மறதியாய்
வைத்தைனோ
இந்த ஷோகேஸ்
இழுவறையில்
அந்த வண்டி சாவி
கொக்கியில்
கோர்த்தேனோ
உயரப் பரணில்
பண்டை பழசு
பொருட்களுடன்
தூக்கி எறிந்தேனோ
ஏன் அந்த
இராணுவ சீருடை
இரு கை நவீன துப்பாக்கி
தோள்குறுக்காய்
குண்டு இடை பெல்ட்
தோளில் ஒரு
ராக்கெட் லாஞ்சர்
இடுப்பில் எறி குண்டு பை
ஏந்தி விறைத்து
நிற்கிறான்
கோபக் குளிரில் உறைந்து போனானோ
அவன் தோற்றம்
கையெல்லாம் ஆயுதம்
தாங்கி
கோபத்தில் கண் விரிந்த ஏதோவொரு
தெய்வப் படத்தை
நினைவூட்டியது
நான் ஓங்கி ஒலித்த
என் மொழி
ஏன் அவன் காதுகளை
எட்டவில்லையோ
காதுமறைக்கும்
உலோகத் தொப்பி மறைப்பினாலா
சிந்தை மறைக்கும்
வேறெதும்
காரணமோ
அநேகமாய்
என் மொழி….
தீப்பற்றி எரியும்
கட்டடங்கள்
குருதி வழிய ஓடும்
மனிதம்
பெண்கள்.. குழந்தைகள்.
முதியோர்
செல்லப் பிராணிகள்
ஓட்டம்.. ஓட்டம்
உயிர் காக்கும் ஓட்டவெளியில்
அங்கு தான்
என் மொழி
தொலைந்து இருக்க
வேண்டும்….
என் மொழியை
எனக்கு மீட்டுத் தாருங்கள் பிளிஸ்…
அதனால்
நான் பேச நினைத்த
மனிதமும்
தேடித் தாருங்கள்
பிரதி உபகாரமாய்
என் மூச்சால்
உங்களை அரச்சிப்பேன்
கேள்வி…
எங்கு தொலைந்து
போனது…
எங்கு தேடியும்
கிடைக்கவில்லை
தேடித் தேடி/கேள்விக்காரன்
அறிவுத் துடைப்பம்
கொண்டு
இண்டு இடுக்கு
எல்லாம்
நுணுக்கமாய்ப்
பெருக்கிப் பார்த்து
விட்டேன்
என் மொழியோடு
அன்பும் காணவில்லை.
அந்த அலமாரியில்
கை மறதியாய்
வைத்தைனோ
இந்த ஷோகேஸ்
இழுவறையில்
அந்த வண்டி சாவி
கொக்கியில்
கோர்த்தேனோ
உயரப் பரணில்
பண்டை பழசு
பொருட்களுடன்
தூக்கி எறிந்தேனோ
ஏன் அந்த
இராணுவ சீருடை
இரு கை நவீன துப்பாக்கி
தோள்குறுக்காய்
குண்டு இடை பெல்ட்
தோளில் ஒரு
ராக்கெட் லாஞ்சர்
இடுப்பில் எறி குண்டு பை
ஏந்தி விறைத்து
நிற்கிறான்
கோபக் குளிரில் உறைந்து போனானோ
அவன் தோற்றம்
கையெல்லாம் ஆயுதம்
தாங்கி
கோபத்தில் கண் விரிந்த ஏதோவொரு
தெய்வப் படத்தை
நினைவூட்டியது
நான் ஓங்கி ஒலித்த
என் மொழி
ஏன் அவன் காதுகளை
எட்டவில்லையோ
காதுமறைக்கும்
உலோகத் தொப்பி மறைப்பினாலா
சிந்தை மறைக்கும்
வேறெதும்
காரணமோ
அநேகமாய்
என் மொழி….
தீப்பற்றி எரியும்
கட்டடங்கள்
குருதி வழிய ஓடும்
மனிதம்
பெண்கள்.. குழந்தைகள்.
முதியோர்
செல்லப் பிராணிகள்
ஓட்டம்.. ஓட்டம்
உயிர் காக்கும் ஓட்டவெளியில்
அங்கு தான்
என் மொழி
தொலைந்து இருக்க
வேண்டும்….
என் மொழியை
எனக்கு மீட்டுத் தாருங்கள் பிளிஸ்…
அதனால்
நான் பேச நினைத்த
மனிதமும்
தேடித் தாருங்கள்
பிரதி உபகாரமாய்
என் மூச்சால்
உங்களை அரச்சிப்பேன்
கேள்வி…
