
O
திருவண்ணாமலை திருக்கோவில் தேர் ஓடாமல் நின்ற போது, தம்மை அணுகிய திருக்கோவில் பொறுப்பாளர்களிடம் யோகி கூறியது என்ன ?
O
திருவண்ணாமலை திருக்கோவில் திருத்தேர்களுக்கு இரும்புச் சக்கரம் பொருத்திய பிறகு நடந்த தேரோட்டத்தின் போது, சிறிது தூரம் ஓடிய பிறகு , திருவூடல் தெரு அருகே வந்ததும் அண்ணாமலையார் பெரிய தேர் ஓடாமல் நின்றுவிட்டது . எவ்வளவோ முயற்சி செய்தும் தேர் அசையவில்லை. ஏதாவது குற்றம் நிகழ்ந்து விட்டதோ என்று கவலையுற்றனர் புதிய பொறுப்பாளர்கள்.
O
எப்போதும் தேர் புறப்பாட்டின் போது, யோகியை பொறுப்பாளர்கள் அழைத்துச் சென்று துவங்கி வைக்கச் செய்வர். புதிய பொறுப்பாளர்கள் இதை செய்ய இம்முறை மறந்துவிட்டனர். அவர்கள் யோகியிடம் ஓடோடிச் சென்று, நடந்ததற்கு மன்னிப்பு கோரினர்.
O
யோகி அதெல்லாம் ஒன்றுமில்லை. ” இப்போது போய் தேரை இழுத்துப் பாருங்கள்; தேர் ஓடும்! ” என்று
உறுதியாகத் தெரிவித்தார். மீண்டும் சென்று தேரை இழுத்த போது, யோகி கூறியபடி தேர் அசைந்தாடி ஓடத் துவங்கியது கம்பீரமாக !
O
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜயகுரு ராயா
