
கடல் வா வா என அழைத்தபோது
கைகள் கோர்த்து நீராட ஓடினோமே
களிவெறி ஏறி அலைகளில்
ஆடையற்று புரண்டோமே
அவ்வசைவுகளின் நளினங்களெல்லாம்
என் கனவுகளில் வருவதில்லை
பிரம்மாண்டத்தின்
நம் கண்கள் சிவந்த
சிறு துளி விசிறல்கள்
திளைப்பில்
நம் கண்கள் சிவந்த
சிறு துளி விசிறல்களை
சித்தத்தின் திரை காட்சிப்படுத்துவதில்லை
இப்போது பெண்ணே
என் துணையற்ற நீந்துதலின் அக்கரையில்
ஒரு லாந்தர் விளக்கோடு காத்து நிற்கிறாய்
என் நினைவுகளை வெட்டி ஒட்டி
புதியதாயொரு கைப்பெட்டியளவு கடல்
கவிதைகளை ஒருவர் மேல் ஒருவர்
கொப்பளிக்க —
இதில் பெரிதாய் ஒன்றுமில்லை
அறிந்த இக்கரையென்பதும்
அறியாத அக்கரையென்பதும்
கனவின்
கண நேர இடைவெளியே
