எந்த ஊர் ?/ மதுவந்தி

                    பிறந்து வளர்ந்த மதுரை விட்டு, 
                    பிழைப்பிற்கென பம்பாய் வந்து, பின் 
                    கோவைக்கு மாற்றலாகி,
                    தணிக்கை, நிர்வாகமென 
                    வாரந்தோறும் பயணம் 
                    ஊர் ஊராய். 
                   அந்தமானில் பயண வேலை முடித்து     
                   விமான நிலையத்தில் காத்திருந்த வேளை,
                   அருகமர்ந்த பயணி பேச்சிடையே கேட்கிறார்,
                   “ நீங்கள் எந்த ஊர்?”. 
                   பதில் சொல்லாமல் 
                   யோசித்தபடியிருக்கும் என்னை 
                  ஆச்சரியமாய் பார்த்துவிட்டு 
                  பத்திரிகை படிக்க ஆரம்பிக்க,
                  யோசித்துக் கொண்டேயிருக்கிறேன்,

                  எது எனது ஊர்?. 

One Comment on “எந்த ஊர் ?/ மதுவந்தி”

  1. மதுவந்தி
    Where the world has not been broken in to narrow domestic walls…(Tagore)
    எல்லைகள் இல்லா உலகம்
    என் இதயமும் அதையே விரும்பும் என்ற கவிஞர் வரிகளை நினைவுப்படுத்துகிற விதம் அருமை.
    உலகம் சுருங்கும் நிலை
    உறவுகள் பெருகும் நிலை
    இது கவியின் மனநிலை…
    அற்புதம்.

    உலகம்
    சுருங்கி
    உள்ளூராதல்

    உறவு
    விரிந்து
    உலகளவாதல்

    அன்பு
    அறிவு
    ஞானத்தின்
    விளைவு..

    மத

Comments are closed.