
கைபேசி ஒலித்தது
அழைத்தவரை அறிய முடியவில்லை
மனசு வதைபடுகிறது
பெண்ணை இரையாக நினைக்கிறது
துணையாக மதிக்கவில்லை
ஆண் எனும் மிருகம்
பசக்கென்று அவளின் உச்சந்தலையில் அவன் முத்தமிட்டான்
ஆசீர்வாதம் ஆசீர்வாதம் என்றான் அருகிலிருந்தவன்
எனக்கோ.. என்னவோ…போலிருந்தது
துரோகிகள் இங்கு
போராட்டங்கள் தோற்கின்றன
தீதும் நன்றும் பிறர் தர வாரா
கனவுகளைத் தாண்டி வாருங்கள்
நிஜங்கள் காயம்பட்டுத் துடிக்கின்றன
வெகு தூரம் செல்லவேண்டியிருக்கிறது
தீபம் ஏந்திச் செல்கிறாய்
மிகப் பெரிய பள்ளம் எதிர்படுகிறது
தப்பிப்பதற்கு
அந்த வெளிச்சம் உதவாது
நெடுநாட்களுக்குப் பிறகு
அவனைப் பார்த்தேன்
புதியமுகம் அவனுக்குப் பூத்திருந்தது
பழையபுன்னகை சிறிதும் தலைகாட்டவில்லை
சூடாமல் வாடுகிறது பூ
பருகாமல் கெடுகிறது பால்
தீண்டாமல் வதைபடுகிறது தேகம்
நானை விட்டு விட முடியாது
நான் தான் இயங்க முடியும்
நான் இல்லாவிட்டால் நான் இல்லை
யாராகவும் இல்லை
நானாக இருக்கிறேன்
சின்னஞ்சிறு செடி அசைந்தாடுகிறது.
🦀
