எனக்கும் உனக்குமானது எஸ் வி வேணுகோபாலன் 

ஒரு புறாவைத் தேடினேன் பின்னர் உனக்குப் பிரியமான வண்ணத்துப் பூச்சி மென் துளிர் மாவிலை பாரிஜாதப் பூ பாட்டி வீட்டு நெய் அதிரசம் ஊதா வண்ணத்துக் கோழிக் குஞ்சு ………………….இந்த நேரத்தில் இது எதற்குமே வாய்ப்பற்ற வெளியில் நீண்ட பயணத்தில் இருக்கிறேன் தவிரவும் கிடைத்தாலுமே சேர்க்க இயலாத திசையில் 
ஆனாலும் தாவி வந்து உன்னைத் தழுவவும் நழுவவும் களைப்பேறும் வரை கண்ணாமூச்சி ஆடவும் உன் ஈர முத்தங்களோடு என் பக்கமே திருப்பிச் செலுத்தி விடவும் காற்றில் அனுப்பி வைக்கிறேன் 
உனக்கான இசையை -எனக்குமானது அது 
***********

2 Comments on “எனக்கும் உனக்குமானது எஸ் வி வேணுகோபாலன் ”

Comments are closed.