
தன்னையறியாமல் இருப்பதை மறந்துவிட்டேன்
ஒவ்வொன்றும் தனக்கான போதுமான இடத்தை ஆக்கிரமிக்க துவங்கிவிட்டன
இருக்கும் அறையின் வெளியே
இயல்பு நிறைந்திருப்பதைப் பார்க்கும்போது
உணர்வது ஒரு சிமிட்டலில் தவறிவிட
எப்படியாகிலும் இடம்பெயர்தல்தான்
இதற்கு ஒரே வழி
நடமாட்டமில்லாத தூரத்தின் அசையாமை
அருகில்வர மறுக்க
இறங்கிச் சென்று தூரத்துள்
வசிக்க பழகிகிக் கொள்ள வேண்டும்.
