யோகி – இன்றொரு சேதி….


O
திருவண்ணாமலை யோகி ஆஸ்ரமத்திற்குள் வந்த நாய்க்கு யோகி வைத்த பெயர் என்ன ?
O
யோகி திருவண்ணாமலை ஆஸ்ரமத்தில் பிரதான் மந்திர் வாசல் அருகே அமர்ந்து தரிசனம் கொடுத்த காலமது !
O
ஒருமுறை ஒரு அன்பர் யோகியை தரிசித்து ஆசிபெற்று திரும்பிக் கொண்டிருந்த போது, அவருக்கு அருகே நாயொன்றும் சென்றது. உடனே யோகி அன்றைய ஆஸ்ரம வாட்ச்மேன் திரு கண்ணன் அவர்களிடம், ” கண்ணன் அவரை கூட்டிட்டு வருவோம் ! ” என்றார். கண்ணன் திரும்பிச் சென்று கொண்டிருந்த பக்தரை அழைத்தார்.
யோகி , அவரை இல்லைக் கண்ணன், இவரை அழைத்து வருவோம் ” என்று நாயை சுட்டிக் காட்டினார்.
O
ஒரு கணம் திகைத்துப் போன கண்ணன், கஷ்டப்பட்டு, தம் இரு கால் முட்டிகளுக்கு இடையே நாயை லாவகமாகப் பிடித்தவாறு, யோகியின் அருகில் அவரை அழைத்து வந்தார். அவரும் யோகியின் அருகே வந்ததும், தம் வாலை ஆட்டியவாறு அன்போடு யோகி அருகில் வந்து நின்றார்.
O
யோகி கண்ணனிடம் ” இவர் பெயர் என்ன. ? ” என்று கேட்க, ” பெயர் தெரியலை சாமி, இங்கே வரும் அவ்வப்போது, சாப்பாடு போடுவோம் ” ஏன்றார் கண்ணன்.
யோகி தமது வலதுகால் திருப்பாதத்தை தூக்கி, அந்த நாயின் முதுகில் பரிவுடன் தடவிக் கொடுத்து, ” இவரை ராமுன்னு கூப்பிடுவோம் ” என்றார் அன்பொழுக !
O
அதிலிருந்து பகவான் தினமும் பிரதான் மந்திர் வாசலில் தரிசனம் கொடுத்து முடித்துச் சென்றதும், ராமு
யோகி அமர்ந்த இடத்தில் போய் அமர்ந்து கொள்ளும்.ரொம்ப நாட்களாக இது தொடர்ந்தது…
O
சன்னதித் தெரு இல்லத்தில் சாய்பாபா என்றால் ஆஸ்ரமத்தில் ஒரு இராமு … யோகியின் அன்பு எல்லைகளற்றது..
O
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜயகுரு ராயா