
மின்கம்பித் தடத்தில்
வேகத்தடைகள் போல
வரிசையாக வீற்றிருக்கும் உன் கூட்டம்.
ஒரு சிறு ஒலி கேட்டாலும்
பட்டென்று உயரமாய்
ஏறும் விலைவாசி போல்
சிட்டென்று பறந்து விடுவாய்.
உருவில் சிறியதாக இருந்தாலும் உன்னுடைய
வீரியம் பெரிதென்பான் தாயத்துக்காரன்
அனுபவித்து மகிழ்ந்தவரே அதற்கு விடைசொல்வார்.
தண்ணீரில் நீராடும் பறவைகள் மத்தியில் விதிவிலக்காய்
மணலை நீராக்கிக் குளிக்கும் உன் மகத்துவம் பெரிதே
சிட்டுக் குருவிக்கென்னக் கட்டுப்பாடு
என்று உன் சுதந்திரத்தின் பெருமையைப் பாடினாள்
எம் திரைப்படநாயகி.
இன்றோ எழுத்தில் பேச்சில் எல்லாவற்றுக்கும் கட்டுப்பாடுகள்தாம்.
பயமாயிருக்கிறது
அச்சமின்றி வாழ உன்னிடம்தான் கற்க வேண்டும்.
அதனால்தான் விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக் குருவி போல என்றானோ எம் முண்டாசுக் கவிஞன்.
