வண்ணதாசன் கவிதைகள்

வானின் கீழ் எல்லாமே
சூரியன் சூடிய பூ.
%
கல்லிலும் சிக்கி முக்கி.
பனியிலும் குத்துக் கத்தி.
%
பூப் போல்
உதிர்கிறதொரு
பூ.
%
தீ அறியும்
சாம்பலின் வதை.
%
தைப்பினும் ஏற்றினும்
முள் போல் கழு.
கழு போல் முள்.
%
சிலை முலை மேல்
அலைகிறதொரு
நிலை கொளாச் சுடர்.
%
இருக்கிறதா
முற்றிலும் இனிக்கிற ஒரு கனி?
முற்றிலும் உவர்க்கிற ஒரு உப்புக் கல்?
%
புங்கையில் காகம்
குயில் மா மரத்தில்
காற்றுக்கு ஒன்றுதான்
கரைதலும் கூவலும்.
%
பூ இலாச் செடியில்
செடியே ஒரு பூ.
%
மீள்.
2016.