காலம்/மீ.விசுவநாதன்

அகதி களாக அலையலையாய் மக்கள்
சகமனித அன்பை விரும்பிப் புகவரு
கின்றார்கள்; எந்த இனம்மதம் என்றாலும்
நன்றாகக் காக்கும்நம் நாடு. (1005) 20.03.2022

கோவிற் சிலைகளைக் கொள்ளை அடிப்பவர்கள்
ஈவிரக்க மில்லாத பாவிகள் – பூவிலும்
மெல்லிய நல்மன நீதிமான் கண்ணீரே
புல்லரின் பூண்டழிக்கும் வாள். (1006) 21.03.2022

பள்ளிக் குழந்தையர் பச்சை மனத்திலே
அள்ளி அறமே பதிக்கணும் – உள்ள
மொழிநன்கு கற்கவழி காட்டணும்; நல்ல
வழிக்கான பாடம் இது . (1007)22.03.2022

2 Comments on “காலம்/மீ.விசுவநாதன்”

Comments are closed.