இயக்குனர் வெங்கட் கிளிசிரின் கதைகள் : மறு பதிவு.

காரைக்குடி செட்டியார்கள் தம் மகன்களை சிறு வயதிலேயே கல்லாப் பெட்டியில் உட்கார வைத்துப் பழக்குவது போல , என் அப்பா என்னை இளம் பிராயத்திலேயே ஒரு நாடகம் பாக்கியில்லாமல் உக்கார வைத்தார். இப்போ நான் பார்க்க அமர்ந்தது
வாணி மகால். சிகப்பு கர்டனில் விவேகா பைன் ஆர்ட்ஸ் என்று பச்சை வெல்வெட் பேனர். அன்றைய
நடிகர், எழுத்தாளர் , வக்கீல் சோ ராமசமி நடிக்கும்
1968 இன் சிறந்த நாடகம்…சரஸ்வதியின் சபதம்.
தலை சுற்றியது! காரணம் ரிவால்விங்க் ஸ்டேஜ்- மேடை சுழன்று வெவேறு லொகேஷன்களைப் படைக்க , திரை கீழே விழாமல்
நாடகம் நடந்து கொண்டிருந்தது! பெரிய ரிலீப்!
ஒரு சினிமாவில் கிடைக்கிற continuum அகப்பட்டது!
சுழல் மேடை முதல் முதலில் ஜப்பான் தியேட்டர்களில் பயன்படுத்தப் பட்டு உலகம் முழுவதுமாக பரவியது. Hydraulic engineers கொண்டு வடிவமைக்கப்பட்டு இயக்கப் பட்டது
இந்த நாடகத்தில்
சோ ஒரு சினிமா கதாசிரியர். ஒரு சினிமா தயாரிப்பாளருக்கு கதை சொல்ல சொல்ல இன்னொரு பக்கம் அவர் சொல்லும் narration கண்ணெதிரே காட்சியாய் விவரிக்கப் பட்டது. ஒவ்வொரு காட்சிக்கும் முடிவில் விழும் திரையும் , interlude musicக்கும் அலுப்பு தட்டின ஜனங்களுக்கு
இந்த புதிய யுத்தி பிடித்திருந்தது.
முழுக்க முழுக்க சோ இதில் அன்றைய தமிழ் சினிமாவை நையாண்டி செய்திருந்தார். பேஷண்டின் நாடியைப் பிடித்து “உனக்கு பிளட் கேன்ஸர் “எனும் டாக்டர், கிளைமாக்ஸில் சண்டை முடிந்ததும் ஜீப்பில் வந்திறங்கும் போலீஸ் , “அத்தான் “என காதலன் பித்தானை திருகும் கதானாயகி, தொந்தி கதானாயகர்கள்… யாரையும் விட்டு வைக்கவில்லை!
இந்த ரக நையாண்டி படைப்பை ஹாலிவூடில்
Spoof என்று குறிப்பிடுவார்கள். Farce என்றும் ஒரு பேர் உண்டு. Carry on cleo, History of the world , இதெல்லாம் spoof வகை. தமிழ் படம் என்று ஒரு சினிமா , அதுவுமே. நான் 1993 யில்
எழுதின “பெரிய தம்பி “கூட தமிழ் சினிமா பற்றிய ஒரு Spoof.
சோவிடம் பெர்னார்ட் ஷா , ஆஸ்கார் ஒயில்ட்,
பி ஜி ஓடவுஸ் இவர்களின் தாக்கம் நிறைய இருந்தது.
ஷாவின் “Pygmalyon “நாடகத்தைத் தழுவி சோ எழுதின ஒரு நாடகம் “மனம் ஒரு குரங்கு” இதைப் பற்றி
பத்திரிகையாளர்கள் கேட்டபோது “அதுக்கு என்ன பண்ண? ஷா முன்னாடி பொறந்தார் .. அவருக்கு மொதல்ல தோணித்து! நான் பின்னாடி பொறந்தேன்
எனக்கு லேட்டா தோணித்து” என்றார்!
“சரஸ்வதியின் சபதம்”நாடகத்தில் ஒரு காட்சியில் கதா பாத்திரங்கள் கதாசிரியரைத் தேடி
வருவதாக சித்தரித்திருந்தார். இந்த யுத்தி 1921 ம்
வருஷம் இத்தாலிய dramatist ஒருவர் எழுதிய நாடகத்தில் வருகிறது! இதை எங்கே பிராமணன் விவாத நேரத்தில் அவரிடம் சொன்ன போது , “நீ ஏன் அனாவசியமா இத்தாலி நாடகத்தையெல்லாம் படிக்கிற? “என்று கூறி சிரித்தார்! “எங்கே பிராமணன் “இரண்டாம் பாகம் தொடக்கத்தில் , ஏற்கெனவே முதல் பாகத்தில் முடிந்து விட்ட கதையை எப்படி re-start பண்னுவது என்ற கேள்வி எழுந்தது. நான் இந்த உத்தியை உபயோகிகலாம் என்றதும் துள்ளிக் குதிக்காத குறையாய் ஆமோதித்தார்! எங்கே பிராமணன் இரண்டாம் பாகம் பார்த்தவர்களுக்கு நினைவிருக்கும்!
முதலில் வியட்னாம் வீடு , அப்புறம் சோவின் இந்த நாடகம் என்னை வெகுவாக பாதித்தன. இதற்குள் அப்பா என்னை சர்வர் சுந்தரம் நாடகத்தைப் பார்க்க வைத்தார். கே.பி சார் ஒல்லியா ஷர்டை இன் பண்ணிட்டு இருப்பார். ஒரு சமயம் “ஞான ஒளி “நாடக இடைவேளையில் மனைவி ராஜம் மாமியோடு கொட்டகைக்கு வெளியே புகைத்தபடி நின்றிருந்தார்.
கும்பிட்டேன்-பதிலுக்கு கும்பிட்டு , என்னையேப் பார்த்தார் சிறிது நேரம். அப்போது நான் எழுத ஆரம்பிக்காத நேரம்… ( சார்! வருங்காலத்தில் உங்களோடு இணைந்து சகானா தொடர் இயக்கப் போறேன்!
கவிதாலயாவுக்கு சாந்தி நிலயம் , இலக்கணம் மறுதோ? இந்த இரண்டு தொடரை இயக்கும் பொறுப்பை என்னிடம் 2012-13 ல் ஒப்படைப்பீர்கள்… உங்கள் லட்சியப் படம் ஒன்றிற்கு என்னை திரைக்கதை, வசனம் எழுதச் சொல்வீர்கள்… நானும் எழுதி ஒப்படைப்பேன் .. படித்து, சிலாகித்து, ஏன் ஆரம்பத்திலேயே என்னிடம் சேராமல் போய் விட்டாய்? என அங்கலாய்ப்பீர்கள்!
ஆனால்… செட்டில் என்னோடு பணி புரி! உனக்கு பிரயோஜனப் படும்! என்பீர்கள்… ஆனால் அதற்குள்
காலன் அவசரமாய் அழைக்க… கோடானு கோடி ரசிகர்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு திடீரென
பிரிவீர்கள்! என் இனிய ஆசானே!!)

கண்ணில் நீர் முட்டுகிறது..
நிறுத்திக் கொள்கிறேனே?
பிளீஸ்?

One Comment on “இயக்குனர் வெங்கட் கிளிசிரின் கதைகள் : மறு பதிவு.”

Comments are closed.