ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 12


அழகியசிங்கர்


ஜெகன் : வணக்கம்.

அழகியசிங்கர் : வணக்கம்.

மோஹினி : வணக்கம்.

அழகியசிங்கர்: வணக்கம்.

ஜெகன் : புதிய முயற்சி எப்படி இருக்கிறது?

அழகியசிங்கர் : என்னைப் பொறுத்தவரை நன்றாகப் பொழுது போகிறது.

மோஹினி : உங்களால் முன்புபோல் புத்தகம் படிக்க முடியவில்லை இல்லையா?

அழகியசிங்கர் : ஆமாம். அதெல்லாம் தடுமாற்றமாகத்தான் இருக்கிறது.  ஆனால் ஒவ்வொரு நாளும் விருட்சம் கொண்டு வருவதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

ஜெகன் : உங்கள் இதழில் கவிதைகள்தான் அதிகம் போலிருக்கிறது.

அழகியசிங்கர் : ஆமாம்.

மோஹிணி : உங்களுக்குத் திருப்தியாக இருக்கிறதா?

அழகியசிங்கர் : நான் ஒவ்வொரு கவிதையையும் பலமுறை படிக்கிறேன்.  எனக்குத் திருப்தியாக இருந்தால் மட்டும் பிரசுரம் செய்கிறேன்.

ஜெகன் : கவிதையில என்ன குறை உங்களுக்குத் தோன்றுகிறது?

அழகியசிங்கர் : எல்லோரும் கருத்துக்களைக் கொட்டுகிறார்கள்.கவிதை என்ன எழுதுவது என்ற பாடுபொருள் யாரிடமும் இல்லை.  சொன்னதையே சொல்கிறார்கள்.

மோஹினி : பற்றிக் கவிதைகள் எழுதுகிறார்கள்.

ஜெகன் : இப்போது தமிழவன் தொகுத்த சாகித்திய அக்காதெமி புத்தகம் பார்த்தீர்களா?

அழகியசிங்கர் : பார்த்தேன். இளையவர்கள் புதுக்கவிதைகள் என்ற பெயரில் 40 வயதுக்குட்பட்டவர்கள் கவிதைகளைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

மோஹினி : புரியவே இல்லை பல கவிதைகள்.

அழகியசிங்கர் : அது தேவை இல்லை என்கிறார்.  புரியாமல் இருப்பதுதான் இத் தொகுப்பின் சிறப்பு.

ஜெகன் : கவிதையின் பாடு பொருள் என்ன

அழகியசிங்கர் : காதல் கிடையாது.  தற்கொலைதான் பெரும்பான்மையான கவிஞர்கள் எழுதி உள்ளார்கள். 

மோஹினி : நாளை நாம் சந்திப்போம்.

அழகியசிங்கர் : ஆமாம். 

One Comment on “ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 12”

Comments are closed.