
ஒரு வார்த்தையில்
என்னை உருவாக்கினாய்
சிறு நம்பிக்கையின்மையில்
அடியோடு புதைத்தாய்
வாழும் காலம் முழுமைக்கும்
நீதானே அனைத்துமானாய்
தள்ளி நின்ற பின்னே
உயிர்க்கவில்லை நானே…
தந்தையின் அன்பை
உணர்ந்தேன் நல்விதமே
உள்ளதை எல்லாம்
உரைத்தேன் உன்னிடமே…
அறியாது செய்த பிழையெதுவோ
தெரியாது தவிக்கிறேன்
எனக்குள் இருக்கும் உன்னையும்
திரையிட்டு மறைக்கிறேன்
சுழற்றும் பிரபஞ்சவெளியில்
காலத்தின் கரங்கோர்த்து
நம்பிக்கை வெளிச்சத்தில் பயணிக்கிறோம்
நீயும்… நானும்… தனித்தனியாக…
வாழ்தல் இனிது

அன்பின் நன்றிங்க ஐயா 💐