
சோளக்காட்டு பொம்மையின்
தலையில் எச்சம் போட்ட
கூட்டமென்பதை மறந்துவிட்டு.
மொட்டைமாடியில்
பரப்பிவிடப்பட்ட
கோதுமைக்கு அருகில்
கண்டனம் தெரிவிக்கும்
வகையில் கருப்புத்துணியை
பறக்கவிட்டேன்…
கால் வரிசையில்
ஒருகவிதையும்
தன் வாய் வரிசையில்
ஒருகவிதையுமாய்
எழுதிவிட்டு சென்றிருந்தது
சிறகுகளின் அத்தாட்சியோடு.

அருமை கவிஞரே.
சிறப்பான கவிதை. சிறகுகளின் அத்தாட்சி அழகிய சொல்லாடல். வாழ்த்துகள்!
மிகச் சிறப்பான அழகியல் கவிதை. நல்வாழ்த்துகள் சகோதரி
ஆஹா….ஆஹா…இயற்கை எழுதிய கவிதையில்லவா அவைகள்