
ஒரு பொம்மலாட்டம் நடக்குது.. அதுவே வாழ்க்கை யாகுது!
நூலோ அவன் கையில் இருக்குது! வேடிக்கை ஆட்டம் நடக்குது!
( ஒரு பொம்மலாட்டம்..)
இங்கொரு கண்ணும்.. அங்கொரு கண்ணும்.. வேடிக்கை தினமும் பார்க்குது.! ஏழு வண்ணத்தில் ஒவ்வொரு பொம்மைக்கும் ஒவ்வொரு வண்ணம் இருக்குது.! திரைக்குப் பின்னால் இருந்து ஆட்டுகிறான்.. சிரிப்பும் அழுகையும் கலக்குது..!
(ஒரு பொம்மலாட்டம் ..)
பத்துத் தலைகொண்ட இராவணன் போல.. பாசத்தில் அலைகள் எழும்புது..ஒத்தை வாலோடு வானரம் போல மனசோ தீக் கொண்டு எரிக்குது.! இற்றைப் பொழுதிலே இங்கொரு பொம்மை ஆட்டம் வீதியில் நடக்குது.. இரவு முழுவதும்.. பகலில் கூட பொம்மலாட்டம் இங்கு இருக்குது!
(ஒரு பொம்மலாட்டம்..)
