“தாம்ர பரணி” /(மீ.விசுவநாதன்)

மலையில் பொழிந்த மழையால் – இந்த
மண்ணில் நதியாய் வந்தேன்
உலையில் அரிசி பொங்க – என்
உயிர்த்தேன் தந்து உயிர்ப்பேன்

பொதிகை மலையில் பிறந்து – புகழ்
பொருநை எனும்பேர் கொண்டேன்
விதிகை என்னை வாழ்த்த – நெல்
விளைய உயிர்ப்பால் தந்தேன்

மனிதப் பசியைப் போக்க – நான்
வற்றா நீராய் வருவேன்
தனியே எனக்கோர் பெருமை – தாய்
தாம்ர பரணி ஆனேன்

எங்கும் வாழும் மக்கள் – என்
இனமே என்று இணைக்க
பொங்கிப் பாய்ந்து வருவேன் – நான்
பூவாய் நடந்தும் அருள்வேன்.

கலகம் செய்யும் எண்ணம் – ஒரு
கணமும் வராமல் காக்க
உலகம் முழுதும் உள்ள – எந்த
உயிக்கும் தாய்ப்பால் ஆவேன்

(இன்று-22.03.2022- தண்ணீர் தினமாம்)