வீடடங்குதல் /அதங்கோடு அனிஷ்குமார்

வெளியே ரம்மியமாயிருக்கிறது.
மெல்லிய குரலெடுத்து பாடியபடி கடக்கின்றன பறவைகள்.

சூரியன்
புல்லில் படுத்துறங்கும்
பனித்துளியில்
முகம் பார்த்துக் கொள்கிறான்.

சன்னல் சாளரம் வந்து
அறைக்குள்
நான் அடைந்து கிடப்பதை
பரிகாசம் செய்து போகிறது
அணில் பிள்ளை.

தடை தாண்டும்
நதியின்
காலடி ஓசை
காதில் விழுகிறது.

மனம்
கதவு திறந்து
வெளியேறுகிறது.
வீடடங்குதலும்
கூடடைதலும்
ஒன்றா?

-.