முகமது பின் துக்ளக் காவியமா? /இயக்குனர் வெங்கட்


#
“சோ ராமசாமியின் முகமது பின் துக்ளக்
ஒரு நீடித்து நிலைக்கும் நாடக காப்பியம்”
எதனால்?

ஒரு காவியத்திற்கு சில லட்சணம்
தேவை.
1- அன்றைய காலகட்டத்தில் நடப்பவைகளை நகல் எடுக்கும் பொறுப்பு
2- வருங்கால சந்ததிக்கு வழி சொல்லும்
துணிவு
3- எல்லா காலத்துக்கும் ஏற்றதான பயன்பாடுடை கருத்து வழங்கும் தன்மை

இம்மூன்றும் முகமது பின் துக்ளக் நாடகத்திற்கு மட்டுமே இருந்து வருகிறது. பல நாடகங்கள் அன்றாட பிரச்சினைகளை அலசி காயப்போட்டு இருக்கின்றன. ஆனால் பிரச்சினைக்கான தீர்வுகளை சொல்லாமல் தவிர்த்து இருக்கும்.
அல்லது அவை புனையப்பட்ட காலத்தை தாண்டி ஜீவிக்கும் திராணி அற்று வரும் காலத்திற்கு வழங்க கொடை ஏதுமின்றி
அபலையாய் நிற்கும். ஒன்று இருந்தால் இன்னொன்று இருக்காது.
(தொடரும்)