
தத்துவம் என்பதையே மெய்யியல், மெய்ப்பொருளியல் என்ற தெளிவில்லாமல் அழைக்கிறார்கள், தத்துவத்தின் ஐந்தாறு பிரிவுகளில் ஒன்றான மெடாபிஸிக்ஸையும் மெய்ப்பொருளியல் என்று சரியில்லாமல் அழைப்பார்கள், பொதுப்புத்தியுடன் ஆன்மீகம் என்றும் பரமார்த்திகம், அத்யாத்மிகம் என்றும் கூறப்படுகிறது. மீமெய்யியல், மீவியற்பியல் என்று (நவீன) தமிழ்ப்படுத்துவார்கள். இலக்கிய விமர்சனத்தில் தொல்படிவவியல் (ஆர்கிடைப்பல்) திறனாய்வு உண்டு. தத்துவத்துறையில் தியாலஜி (இறையியல்) என்றும் ஒரு பிரிவு உண்டு. சமய இறையியல், தனிமனித இறையியல் (வில்லியம் பிளேக் போல) எனபன இதன் பிரிவுகள். விஞ்ஞானமும் தத்துவத்தின் துறைதான். டாக்டர் ஆஃப் பிலாஸபி என்று பிகெச்.டி. பட்டம் துறைக்கும் கொடுக்கிறார்கள். ஏனென்றால் எல்லாத் துறைகளும் தத்துவத்துறையுள் அடக்கம். (இப்போது சமூக அறிவியல் என்பது போன்று எல்லாவற்றுக்கும் அறிவியலைச் சேர்ப்பதுபோல் முன்பு மேத்ஸ் கூட பி.ஏ. மேத்தமாடிக்ஸ் என்றுதான் பட்டம் கொடுக்கப்பட்டது). ஆன்மீகம் என்று எடுத்தால் மதம்சார்ந்த ஆன்மிகம், சாராத ஆன்மிகம், ஆர்கிடைப்பல், மிஸ்டிசிசம், ஸ்பிரிட்சுவலிசம், அக்கல்ட், இசோடெரிக், தியாசபி, டிரேன்சென்டலிசம் இன்னபிறவாக எல்லாம் பிரிவுகள் உண்டு.
Metaphysics நாவல் என்று சொல்லமுடியுமா?
John Donne போன்றவர்களை metaphysical poet என்பார்கள். பிளேக், வள்ளலார் ஆன்மீகக் கவிகள் தானே? ஆன்மிக நாவலாசிரியர்கள் உள்ளனரா? ஆன்மீகம் பற்றிய நாவல்களை எழுதுபவர்கள் – பாலகுமாரன், இந்திரா சௌந்தரராஜன் போல – சித்தார்த்தா, டாவின்சி கோட் போல உண்டே தவிர ஆன்மிக நாவல் என்று தனிவகையைச் சொல்லமுடியுமா என்று தெரியவில்லை. இந்தவகை நாவல்கள் some aspect of the inner, incorporeal, supernatural, spiritual, archetypal or transcendent aspects of human experience and may emphasise an individual’s movement towards self-actualisation பற்றிச் சொல்பவை என்றுதான் பொதுவாகச் சொல்லப்படுகிறது. கிறிஸ்தவ நாவல்கள் உண்டு. இந்துத்துவ நாவல்களும் உண்டு.
