யோகி – இன்றொரு சேதி…


O
திக்குவாய் குறைபாட்டுக்கு யோகி அளித்த மருந்து எது ?
O
1964ல் யோகி மறைந்த திரு பெருமாள் சடையன் அவர்கள் கடைக்கு வந்த இளைஞன் ராஜு என்பவர் திக்குவாய் குறைபாட்டால், பேச சிரமப்படுவதை அங்கிருந்தோர் யோகியிடம் முறையிட்டனர்.
O
யோகி ராம்சுரத்குமார் என்று உச்சரிக்குமாறு யோகி இளைஞன் ராஜுவை கேட்டுக் கொண்டார்.
அந்த இளைஞன் ” யோகி லாம்சுரத்குமால் ” ,என்று உச்சரித்தான். இந்தப் பெயரை எப்போது சரியாக ” யோகி ராம்சுரத்குமர் ” என்று உச்சரிக்கிறாயோ அப்போது உன் திக்குவாய் பிரச்சனை தீரும் என்று அருளினார் யோகி !
O
1964 லேயே யோகி ராம்சுரத்குமார் என்னும் நாமத்தை சர்வரோக நிவாரணியாக யோகி முன்வைத்த அழகு போற்றத் தக்கது !
O
யோகி ராம்சுரத்குமார் என்னும் திருநாமம் அறுபதுகளிலேயே முளைவிட்டுள்ள அழகு இங்கு கவனிக்கத்தக்கது !
O
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜயகுரு ராயா