ஐந்து குறுங்கவிதைகள்/அழகியசிங்கர்

பெயின்ட்
அடித்த சுவரில்
காக்கைகள் தன்
தூரிகையால்
கோலம் போட்டன.


எந்த அவசரமும்
இல்லை
ஆனால் இன்னும்
கொஞ்ச நேரத்தில்
கொசுக்கள்
துரத்தி
விடும்


நான் எழுதுகிற
கவிதையைக் குறித்து
நீங்களும்
நீங்க எழுதற
கவிதையைக் குறித்து
நானும்
கருத்து சொல்வதில்லை


குருவி
தன் அழகைப் பார்த்து
ரசிக்கிறது
உலகத்தில்
நாம் இனி
எங்கே இருக்கிறோம்
என்று யோசிக்கிறது


நீ இல்லாமல்
நான் இல்லை என்றாள்
அப்படியா என்று
புன்னகைத்தேன்


One Comment on “ஐந்து குறுங்கவிதைகள்/அழகியசிங்கர்”

Comments are closed.