இலக்கிய இன்பம்— 40/கோவை எழிலன்

வடகரை நாட்டு வளம்

சீவக சிந்தாமணியில் திருத்தக்க தேவர் கூறும் அதே மரங்களின் வரிசை முக்கூடற் பள்ளிலும் சொல்லப்படுகிறது.

மூத்த பள்ளி தன் ஆசூர் வடகரை நாட்டின் சிறப்பைச் சொல்லும் போது தெங்கின் இளநீரை கமுகு தாங்கும். கமுகு தன் குலைகளை மாமரங்கள் மீது வைக்கும். மாமரமோ தன் கனிகளைப் பலா மரத்தைச் சுமக்கச் செய்யும். பலா மரத்தின் கனிகளை வாழை மரங்கள் தாங்கிப் பிடிக்கும். வாழைப் பழங்களை மாதுளை தாங்கும். அத்தகைய வளமை கொண்டது எங்கள் ஆசூர் வடகரை நாடு என்று மூத்த பள்ளி பாடுகிறாள்.

“மீது உயர்ந்திடும்
தெங்கு இளநீரைமிடைந்த பூகம்
சுமந்து தன் காயை
சூதம் ஒன்றிச்
சுமக்கக் கொடுக்கும்சூதம் தன்கனி
தூக்கும் பலாவில்
ஓதும் அந்த
பலாக்கனி வாழைஉறுக்கவே சுமந்து
ஒண்குலை சாய்க்கும்
மாதுளம் கொம்பு
வாழை தாங்கும்வளமை ஆசூர்
வடகரை நாடே”