கருங்கல் புத்தன் புன்னகை/ தங்கேஸ்


கொதித்துக்கொண்டிருக்கும்எனது தேநீரை இமைக்காமல் நீபார்த்துக் கொண்டிருக்கும்போதே அது உனது தேநீராகவும்  ஆகிவிடுகிறது
கிளையிலிருந்து விடுதலை பெற்றமுதிய இலையொன்றுபூமியை போய் சேர்வதற்குள்சிறிய தவம் இயற்றி முடித்து விடுகிறது


முத்தமிடும் போதே ஞானம் பெற்றுவிடும் உதடுகள்இதயத்திற்குள் இதயத்தைகடத்தி விடுகின்றன
இந்த நொடிக்காகவே காத்திருந்த கருங்கல் புத்தன்யுகம் யுகம் கடந்த பின்புமுதன் முதலாய் புன்னகைக்கிறான்உள்ளிருக்கும் தேரை சீராகசுவாசம் கொள்கிறது

3 Comments on “கருங்கல் புத்தன் புன்னகை/ தங்கேஸ்”

Comments are closed.