
டிபன் பாக்ஸை திறந்து வைத்துக் கொண்டாள். எலுமிச்சை சாதம்.
அலுத்துக் கொண்டாள். இல்லாவிட்டால் தயிர்சாதம். அம்மா பாவம்.
சாரதி வந்து நின்றான். “கேன்டீன் வரலை.”
“வரலை. தினம் தினம் போர். செலவு அதிகமாகும்.”
சிரித்தபடி போய் விட்டான்.
அடுத்தநாள் அவள் கேன்டீன் போனாள். சாரதி டிபன் வீட்டிலிருந்து எடுத்து வந்தான்.
“இன்று ஏன் கேன்டீன்,”
என்று கேட்டான்.
“அம்மா தயிர் சாதம் என்றாள்.”
“வேண்டாம் என்றேன்.”
“நாளைக்கு..”
“இருவரும் கேன்டீன்தான்,” என்றாள் சிரித்தபடி.
