
வார்த்தையோ செய்கையோ
ஒரு நொடியில்
மின்னலைப் போல
வலி விளைத்துப் போகிறது–
ஒரு கடுஞ்சொல்லோ
ஒரு பலத்த அடியோ
வலிக்கிடையில் ஒளிந்திருக்கிறது–
அந்த நேரம்.
வார்த்தையோ செய்கையோ
பிறிதொரு நொடியில்
சிறு மழையைப் போல
களி கூட்டிப்போகிறது–
ஒரு இன்வார்த்தையோ
ஒரு தட்டிக்கொடுத்தலோ
களிக்கிடையில் காணக் கிடக்கிறது–
அந்நேரம்.
——–அன்புடன் ஆர்க்கே.!

அருமை. கனியிருக்க காய் கவர்ந்தற்று. இல்லையேல் உள்ளாறாது உளப்புண்.