கலை/ அனங்கன்

சாலையோரம் மேடை…திரைகளின்றி நடக்குது இராமாயணம்.

ஒடுங்கியமுகத்தில் ஒப்பனை
எடுபடவில்லை இராமனுக்கு.

சீதைக்கு போதை ஏறினால்தான் வசனமே வரும்….
இராவணன் சீதையைக்காட்டிலும் குள்ளம்தான்.

ஒலிபெருக்கி வசதியின்றி
நடக்கும் கூத்தில் எவ்வித
விதிமுறைகளும் இல்லை….

முன்னிருப்பவனுக்கே எந்தச்
சொற்களும் புரியாது என்று
சொன்னால் கலையை அவமதித்ததாகிவிடும்.

நள்ளிரவில் காயும் நிலவைத்தவிர …ஒன்றிரண்டு பேர் கட்டியதூணியை போர்த்தியபடி உட்கார்ந்தநிலையில் …நல்ல உறக்கம்.

பெருங்குரலெடுத்து அழுகிறாள் சூர்ப்பனகை.