கவிஞன்

புஷ்பால ஜெயக்குமார்

அவனிடம் 

உங்களது 

சராசரி விமர்சனங்களை 

முன் வைக்காதீர்கள் 

அவனை நீங்கள் 

கண்காணிப்பது போல் 

அசவுகரியமானது 

வேறு எதுவும் இல்லை 

அவன் காத்துக் கொண்டிருப்பது 

ஒரு பெரிய காட்டில் என்றால் 

நீங்கள் நம்புவீர்களா 

என்று தெரியவில்லை 

எப்படியோ எதுவோ 

அவன் கண்டுபிடித்துவிடுவது 

ஒரு ஆச்சரியம் தான் 

இருந்தாலும் 

நிரூபணம் ஆகும் பொழுது

அவன் எழுத்தில் 

அவன் மனம் 

பிரளப் பிரள 

வார்த்தைகள் முடிவின்றி 

உதித்தபடி இருந்தது 

உணர்ச்சிகளின் ஏற்றம் இறக்கம் 

சரிசமமாய் இருக்க 

திரவத்தைக் கலக்கும் 

சோதனை குழாயில் 

நிறங்கள் மாறுவது 

யார் கண்ணுக்கும் தெரிவதில்லை

One Comment on “கவிஞன்”

  1. “பிரளப் பிரள ” “வார்த்தைகள் முடிவின்றி உதித்தபடி இருந்தது ” கொடுமை ! தமிழ்த்தெரியாதவரே தமிழ் எழுத்தாளர் என்று ஆகிக் கொண்டிருக்கிறது.

Comments are closed.