சொடுக்குக் கதைகள் /ஜெ. பாஸ்கரன்

  1. சுவற்றுப் பல்லி பூச்சியைக் கவ்வ, ‘ஐயோ பாவம் பூச்சி’ என்றான் கசாப்புக் கடைக்காரன்.
  2. பீட்ரூட் இல்லையென்று காரட் நறுக்கிக்கொண்டிருந்தான். காரட், பீட்ரூட் நிறமானது. விரலில் கத்தி வெட்டு.
  3. பளிச்சிடும் வெள்ளைப் பற்கள் தாத்தாவுக்கு – தினமும் காலையில் தேய்த்துவிடுவார் பல்செட்டினைக் கழற்றி!
  4. வெறும் கவரில் மொய்யெழுதி, சாப்பிட்டு வந்தவனுக்குக் கொடுத்த முகூர்த்தப் பையில் தேங்காய் இல்லை!
  5. இறங்க வேண்டிய ஸ்டாப் போய் அடுத்த ஸ்டாப் வந்துவிட்டது… மீதி சில்லறையைக் கொடுக்க விடாமல் இடையில் கூட்ட நெரிசல்!
  6. உள்ளே நுழைந்து கண்ணாடியில் முகம் பார்த்து தலை சீவி வெளியே வந்தேன். காலி சுழல் நாற்காலிகளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் சலூன் கடைக்காரர்!