சொடுக்குக் கதைகள் – இந்திரநீலன் சுரேஷ்

  1. மரணப் படுக்கையில் கிடந்த
    பெரியவருக்கு மணியார்டர் கிடைத்தது
  • முதல் கதைக்கான சன்மானம்..!
  1. ‘ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும்
    சமாதானம் வெகு அவசியம்’ –
    நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தவன் முன்
    பறந்து வந்து வீழ்ந்தது ‘பாத்திரம்’..!
  2. கடைசி நிமிடத்தில் ஊருக்கு ரயிலைத் தவற விட்டவன்
    கவலையோடு பிளாட்பார பெஞ்சில் அமர்ந்தான்,
    தலைப்பு செய்திகளில் அடுத்த சிலமணிக்குள்
    அந்த ரயில் ‘வரப்’போவதை அறியாமல்..
  3. பிரசாத வரிசையில் கடைசி கரண்டி
    பொங்கலைப் பார்த்த பிச்சைக்காரன்
    ஒதுங்கி வழிவிட்டான்.. பின்னாலிருந்த
    சிறுமிக்கு..
  4. ஸ்ரீரங்கம் கோயில் வாசலில்
    மல்லிகைப்பூ வாங்கி சூடிக் கொண்ட
    வெளிநாட்டுப் பெண்ணிடம் -‘ஏதும்
    நல்ல சென்ட் இருந்தா கொடுத்திட்டுப் போ தாயீ’
    • என்றாள் பூக்காரி.
  5. ‘டிஜிட்டல் பேங்கிங்’ பற்றிச்
    சிறப்பாகப் பேசியதற்காக
    கவரில் பணம் போட்டுக்
    கொடுத்தார்கள், அமைப்பாளர்கள்.
  6. காரின் மேல் வைத்து விற்கும்
    பொம்மையிலொன்று
    காற்றில் கீழே விழுந்து விட
    எடுத்து அணைத்து
    ஒரு முத்தம் மட்டும் கொடுத்து
    திருப்பிக் கொடுத்து விட்டது
    வியாபாரியின் குழந்தை..