யோகி – இன்றொரு சேதி….


O
யோகியை விசிறி சுவாமி என்று பெயர் சூட்டி அழைக்குமுன், திருவண்ணாமலை மக்கள் ஆரம்பத்தில் அறுபதுகளில் அழைத்த பெயர்கள் எவையெவை ?
O
1959 ல் திருவண்ணாமலையை வந்தடைந்த யோகி, அண்ணாமலை வீதிகளில் ஆனந்தமாக ஆடிப் பாடித் திரியும் அதிசயப் பிறவியாக பொதுமக்களுக்கு அறிமுகமானார்.
அவர் நாவிலிருந்து சதா சர்வ காலமும் வெளிப்பட்ட இராம நாமம் அவரது அடையாளம் ஆகியது.
O
யார் எவர் எனத் தெரியாத அந்த ஆரம்ப நாட்களில் திருவண்ணாமலை மக்கள் யோகியை ராம் ராம் சுவாமி, ராம்ஜி சுவாமி என்றே அழைத்து வந்தனர்.
அடையாளப் படுத்தி வந்தனர்.
O
பின்னாளில் விசிறி அவரது அடையாளம் ஆவது வரை, ராம நாமமே யோகியின் அடையாளமாகத் திகழ்ந்தது.
O
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜயகுரு ராயா