
“உங்கள் வயது
உங்கள் உடல்நிலை
உங்கள் உயரம்
இதெல்லாம் வைத்துப் பார்த்தால்
உங்கள் எடை கொஞ்சம் அதிகம்”
மெல்லிய குரலில்
லேசான முறுவலுடன்தான்
சொன்னார் டாக்டர்.
அந்த இளநகைதான்
என்னை இம்சை செய்தது.
மொருமொருவென இஞ்சிப் பக்கோடாவும்
நெய்யில் மிதக்கும் அல்வாவும் எப்போதேனும்
சாப்பிடுவேன் எனச் சொன்னதை
தினமும் மாலையில் தின்பதாய்
நினத்து, பின் எப்படி எடை குறையுமென
கேலியான இளநகையோடு சொன்னாரெனே
கோபமாய் இருந்தது.
எனக்கும் உண்டு கட்டுப்பாடு,
எனக்கும் உண்டு மன உறுதி.
காட்டுவேன் நான் யாரென.
யோசித்தேன், சொன்னதும் மகனும்
ஒத்துக் கொண்டான்.
முடிவெடுத்தாயிற்று,
மாற்றுவது டாக்டரை என .

நிறுத்து புகை பிடிப்பதை
என்றார் டாக்டர்.
உடனே நிறுத்தி விட்டேன்
அந்த டாக்டரிடம்
போவதை!
நல்ல முடிவு.
(Which cannot be mended to be amended)