இனி/புஷ்பால ஜெயக்குமார்

எனது கண்களின் இரப்பைகள்
அடிக்கும் தருணத்தில்
என் நிலை மாறுகிறதா
நான் இருக்கும்போது
இச்சிறிய உலகம்
என்னுடன் இருக்கிறதா
என் நினைவுகளில்
என் சிந்தனைகளில்
எனக்கு வழி கிடைக்கிறதா
நான் மறந்தாலும்
என்னை நினைவு படுத்தும்
என் நான்
என்னுடன் இருக்கிறதா
நான் யாருமில்லை என்றால்
இப்பொழுது இருப்பது நானா
மடிந்த எண்ணங்கள்
காலமாற்றம் அடைகிறதா
பெயரிடப்படாத உணர்வுகள்
வீணாகிப் போகிறதா
இனி தானா இன்னும் இனி தானா