வவேசு
கொலுப்படி பொம்மைகள்
கூடிக் கூடிப் பேசிக்கொண்டிருந்தன;
என்னைப் பார்த்ததும்
“ கவிஞனே கேளும் !
அருகிலுள்ள கொழுத்த முகத்தோன்
எதற்கெடுத்தாலும் தலையாட்டுகிறான்;
ஆடாமல் பொம்மையாய் இரு என்றால்
அதற்கும் தலையாட்டுகிறான்.
அசையாதிருக்கும் எங்களிடை
ஆடும் இவன் தலை எதற்காக ?
தரைப்படியில் அவனைத்
தனியாக வைத்துவிடு !” என்றன.
நான்
“ சரி எனத் தலையாட்டினேன்.”
வவேசு
