அழகியசிங்கர்
என்பா 43
கொலுவைப் பற்றி எழுது என்றாள்
என்ன எழுதுவது என்று கேட்டேன்
மைதிலி கொலு வைத்திருக்கிறாள் என்று
எழுதி விட்டேன் இப்போது
என்பா 44
கொலுப்படிகளில் காந்தி
பாரதி இல்லையில்லை
புன்னகைக்கும் வள்ளலார் பாபா இல்லையில்லை
என்றேன் மைதிலியிடம்
ஆமாம்.கையில் கிடைத்த பொம்மைகளை
வைத்தேனென்றாள்

கவிதையின் கருத்தாழத்தில் உள்ளங்கால் மூழ்கிவிட்டது!