யோகி – இன்றொரு சேதி….


O
ஆரம்ப காலத்தில் யோகி திருவண்ணாமலையில் விரும்பிச் சென்று அமர்ந்த சிற்பக் கூடம் எது ?
O
அறுபதுகளில் அருணாசலேஸ்வரர் ஆலயம் அருகே இருந்த சிற்பக் கூடம்
ஒன்றில் யோகி அடிக்கடி சென்று அமர்ந்திருப்பார். திரு ராமஸ்வாமி என்பவரது சிறிய சிற்பக்கடை அது.
திரு ராமஸ்வாமி யோகி மீது அன்பும் மரியாதையும் வைத்திருந்தார். யோகி பல வெளிநாட்டவரையும் சந்திக்கும் மையமாக இந்த சிறிய் சிற்பக்கடை திகழ்ந்தது.
O
அங்கு செய்து வைக்கப்பட்டிருந்த சிறிய நந்தி சிலை ஒன்றை யோகி அடிக்கடி கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பார் வெகு நேரமாக.
ஒருநாள் அந்த நந்தி சிலையை வாங்குமாறு அமெரிக்க இளைஞர் ட்ரூமென் கெய்லரை கேட்டுக் கொண்டார். அவ்வப்போது நந்திச் சிலையை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்குமாறு அவருக்கு வழிகாட்டினார்.
O
அந்த சிறிய கடைக்காரரின் பெரிய உள்ளம் யோகிக்கு எப்போதும் இடம் தந்து ஆதரித்தது.
O
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜயகுரு ராயா