யோகி – இன்றொரு சேதி….


O
ஸ்ரீ ரமண மகரிஷி யோகிக்கு எவ்வாறு அருள் புரிந்தார் என்று யோகி குறிப்பிட்டுள்ளார் ?
O
யோகி 1947 கோடை விடுமுறையில் தமது தென்னாட்டுப் பயணத்தில் புதுவையை அடுத்து திருவண்ணாமலை வந்து ஸ்ரீரமண மகரிஷியை தரிசித்தார்.
O
ஸ்ரீரமணரின் சன்னிதியில் யோகி கண்மூடி அமர்ந்திருந்த போது, யாரோ தம்மை கவனிப்பதாக ஒரு உள்ளுணர்வு தோன்ற கண் விழித்து பார்த்த போது மகரிஷி ஸ்ரீரமணர் தம்மையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து பரவசமுற்றார். சிறிது நேரம் வரை இந்தப் பார்வை தொடர்ந்தது…
O
ஸ்ரீரமணரின் அருள்விழிப் பார்வையில் மலர்ந்தவர் யோகி !
O
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜயகுரு ராயா