நீதிவெண்பா/மா கோமகன்

23. கத்திரிக்கோல்

“செங்கமலப் போது அலர்ந்த செவ்வி போலும் வதனம்

தங்கு மொழி சந்தனம் போலும் – பங்கி எறி

கத்திரியைப் போலும் இளம் காரிகையே வஞ்ச மனம்

சூத்திரர் பால் மூன்று குணம்”

விளக்கம்: இளமை வளம் மிக்க அழகியே! வஞ்சக மணம் கொண்ட தீயவருக்கு மூன்று குணங்கள். அவை

  1. மலர்ந்த செந்தாமரை போன்ற முகம்
  2. சந்தனம் போற்ற குளுமையான பேச்சு
  3. கத்தரிக்கோல் போல வெட்டும் செயல்