
ஒருபார்வைக்காக உள்ள
சிரத்தையைப் புரிந்துகொள்ள நீங்கள்
காதல்வயப்பட்டிருக்கவேண்டும்.
திரும்பிக்கூட பார்க்காத ஒருதலைக்காதலில்..ஒரு
பார்வைக்காக ஏங்குவதை
வரத்திற்கான தவமென்று…. உங்களுக்கு எச்சொல் பொருந்தி
வருகிறதோ அவற்றால் நிரப்பிக்கொள்ளுங்கள்.
தலைவாருவதில் இருந்து ஆடையைத் தேர்ந்தெடுப்பது
வரை உள்ள இன்பமான துயரம் தலைநரைத்துப்போன
உங்களுக்கு எள்ளவும் புரியாது.
நீங்களும் அதைக்கடந்துதான்
வந்தீர்களா…இருக்கட்டும்
முகிழும் பூக்களெல்லாம் நறுமணம் வாய்ந்தது என்று
உங்களால் சொல்ல முடியுமா..
நினைத்தாலே மணக்கும் முகிழும் பூ அவள்…
எல்லாத் திசையையும் மணக்கவைக்கும் காதலி
உங்களுக்கும் உண்டென்றால்
என்உணர்வைப் புரிந்துகொண்டு …
அவள் பார்வை முகிழ்ந்து என்மேல்படர உங்கள் பிரிய
தெய்வங்களிடம் எனக்கான
வேண்டுதலை வையுங்களேன்.
♦
