பிரதிபலிப்பு/-ஷெல் சில்வர்ஸ்டைன்

தமிழில் : .மோகனரங்கன்


ஒவ்வொரு முறையும்
தலை கீழாகத்
தண்ணீரில் நிற்கும்
மனிதனைப் பார்க்கும்தோறும்,
அவ்வாறு செய்யக்கூடாது என்றாலும்,
அவனை நோக்கி
சிரிக்கத் தொடங்குவேன்.
ஒருவேளை
இன்னொரு உலகில்
வேறொரு காலத்தில்
மற்றொரு ஊரில்,
அம்மனிதன் நேராக நிற்கக்கூடும்.
ஒருவேளை
அப்போது
அங்கே நான்
தலைகீழாகக் தோன்றலாம்.