
O
புதுவை அரவிந்தாஸ்ரமத்தில் தாம் பெற்ற உன்னத அனுபவமாக யோகி உரைத்தது என்ன ?
O
1947 மற்றும் 1948 இரண்டு ஆண்டுகளிலும் கோடை விடுமுறையின் போது யோகி தமது தென்னாட்டுப் பயணத்தில் புதுச்சேரி வந்தார். அந்த இரு சமயங்களிலும் மகான் ஸ்ரீ அரவிந்தரை தரிசிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க வில்லை. ஸ்ரீ அரவிந்தர் ஆண்டில் மூன்று நாட்கள் மட்டுமே தரிசனம் தருவது வழக்கம்.
O
ஆனால் அரவிந்தாஸ்ரமத்தில் யோகி ஒரு எல்லையற்ற அமைதியை உணர்ந்தார். அந்த அமைதிதான் ஸ்ரீஅரவிந்தர் என்றுரைத்தார் யோகி.
O
ஒரு மகாத்மா என்பது அவரது உடல் அல்ல; அந்த உருவமும் அல்ல ! மகாத்மா ஒரு உயர் தன்மையில் திகழ்கிறார். அந்தத் தன்மையை உணர்வதே அவரை தரிசிப்பதாகும்.
இந்த உள்ளுணர்வு தரிசனத்தை யோகிக்கு ஸ்ரீஅரவிந்தர் அருளினார்.
யோகி ஸ்ரீ அரவிந்தரை உடலில் பார்க்கவில்லை; மாறாக உள்ளுணர்வில் தரிசித்தார் ! இதுதான் மெய்யான தரிசனம்.
O
யோகி பின்னாளில் தம்மைப் பற்றி குறிப்பிடும் போதும், இதைத்தான் குறிப்பிட்டார். ” Don’t limit this beggar with this physical frame. He is everywhere …” ( இந்தப் பிச்சைக்காரனை இந்த உடலாக மட்டும் கருதி விடாதீர்கள்; இவன் எங்கும் இருக்கிறான் )
O
யோகி அரவிந்தாஸ்ரமத்தில் இன்னுமொரு உயர் அனுபவத்தைப் பெற்றார். ஸ்ரீஅரவிந்தரின் பூரண யோகம் மனிதனின் மேம்பட்ட நிலையை ( Superman) தெய்வீக நிலையை அடைவதற்கான பாதையாகும். இதை யோகி நேரடி அனுபவமாக அரவிந்தாஸ்ரமத்தில் உணர்ந்தார். தாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சாதாரண மனித வாழ்க்கையை விட, மேம்பட்ட வாழ்க்கை ஒன்று சாத்தியமுள்ளது என்பதை உணர்ந்தார் யோகி.
பின்னாளில் அதை நோக்கி நகர்ந்தார் ஸ்ரீஅரவிந்தரின் அருளால். ராம்சுரத் யோகி ராம்சுரத்குமார் ஆகினார் !
O
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜயகுரு ராயா
