பயணம்/சிறகா

ஒளிக் கதிரை ஊடுருவி
உயர உயரமாக பறக்கும்

சிறகு முளைத்த சிறு பறவை

பூத்த அரும்பு விரிந்து இதழ் மலரும் செர்ரி பிளாசம்

வழியெங்கும் சிரித்தபடி வரவேற்கும் செவ்வரளி

ஆங்காங்கே கானல் நீரில் மிதக்கும்
நீண்ட நெடுஞ்சாலை

மலை தொட்டு விளையாடும் காற்றை
தழுவி செல்லும் வாகனங்கள்

கன்னம் நிமிட்டிச் செல்லும் குளிர்ந்த காற்றின்
ஸ்பரிசத்தில்

கைகள்
தட்டி சிரிக்கும்
மழலைகள்.